புனித பனிமயமாதா திருத்தலம் பெரம்பலூ​ர்

கும்பகோணம் மறை மாவட்டம்

சங்குபேட்டை அருகில், துறையூர் ரோடு, பெரம்பலூர் - 62​1212

திருப்பலி புதிய அமைப்பு முறை

01. தொடக்கச் சடங்கு:-

குரு: 
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே. 

அனைவரும்: 
ஆமென். 

குரு: 
நம் ஆண்டவராகிய இயேசு......
     ...... அனைவரோடும் இருப்பதாக.

அனைவரும்: 
உன் ஆன்மாவோடும் இருப்பதாக.

02. பாவத்துயர்ச் செயல்:-

குரு: 
சகோதர, சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

அனைவரும்: 
எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர, சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கிறேன்.  ஏனெனில் என் சிந்தனையாளும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக்கொண்டு) என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே, ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வான தூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகிறேன்.

குரு: 
எல்லாம் வல்ல இறைவன்...
     ... அழைத்துச் செல்வராக.

அனைவரும்: 
ஆமென். 

குரு: 
ஆண்டவரே, இரக்கமாயிரம்.

அனைவரும்: 
ஆண்டவரே, இரக்கமாயிரம்.

குரு: 
கிறிஸ்துவே, இரக்கமாயிரம்.

அனைவரும்: 
கிறிஸ்துவே, இரக்கமாயிரம்.

குரு: 
ஆண்டவரே, இரக்கமாயிரம்.

அனைவரும்: 
ஆண்டவரே, இரக்கமாயிரம்.


3. உன்னதங்களிலே

உன்னதங்களிலே கடவுளுக்கு
மாட்சி உண்டாகுக
உலகினிலே நன்மனதோருக்கு
அமைதி ஆகுக

  உம்மைப் புகழ்கின்றோம்.
  உம்மை வாழ்த்துகின்றோம்.
  உம்மை ஆராதிக்கின்றோம்.
  ஊமை மாட்சிப் படுத்துகின்றோம்.

உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா,
வானுலக அரசரே
 
  எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா
  ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே
  இயேசு கிறிஸ்துவே
  ஆண்டவராகிய இறைவா,

இறைவனின் செம்மறியே
தந்தையின் திருமகனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரம்

  உலகின் பாவங்களை போக்குபவரே
  எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்,
  தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே,
  எங்கள் மேல் இரக்கமாயிரம்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே.... தூயவர்,
நீர் ஒருவரே... ஆண்டவர்,
நீர் ஒருவரே உன்னதர்,
தூய ஆவியாரோடு,
தந்தையாகிய இறைவனின்
ஆட்சியில் இருப்பவர் நீரே.

  ஆமென்.

04. வார்த்தை வழிபாடு (முதல் வாசக முடிவில்...)

வாசகர்:
ஆண்டவரின் அருள்வாக்கு.

அனைவரும்:
இறைவனுக்கு நன்றி.

பதிலுரைப்பாடல்

(இரண்டாம் வாசகம் முடிவில்)

வாசகர்:
இறைவனுக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்

குரு: 
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

அனைவரும்:  
உன் ஆன்மாவோடும் இருப்பாராக
 
குரு:
(பெயர்) எழுதிய தூய நற்செய்தியில் இருந்து வாசகம்

அனைவரும்:  
ஆண்டவரே, மாட்சி உமக்கே!

(நற்செய்தி வாசகத்தின் முடிவில்)

குரு: 
ஆண்டவரின் அருள்வாக்கு

அனைவரும்:  
கிறிஸ்துவே, உமக்கு புகழ்.

05A. நம்பிக்கை அறிக்கை(சொல்லும்போது)

ஒரே கடவுளை நம்புகிறேன்.
விண்ணகமும் மண்ணகமும்,
காண்பவை காணாதவை யாவும் படைத்த
எல்லாம் வல்ல தந்தை அவரே,
கடவுளின் ஒரே மகனாய் உதித்த
ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே
தந்தையிடமிருந்து பிறந்தார்
கடவுளினின்று கடவுளாக,
ஒளியினின்று ஒளியாக
உண்மைக் கடவுளினின்று
உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர்,
உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
("... மனிதர் ஆனார்" எனச் சொல்லும் வரை எல்லோரும் தலை வணங்கவும்)
தூய ஆவியால் கன்னி மரியாவிடம்
உடல் எடுத்து மனிதர் ஆனார்.
மேலும் நமக்காகப் பொத்தியு பிலாத்தின்
அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டுப்
பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி எல்லாம் வல்ல
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருக்கிறார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும்
புறப்படும் ஆண்டவரும் உயிர்
அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப்
பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர்
வழிவரும் திரு அவையை
நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை
ஏற்றுக் கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும்
எதிர்பார்க்கின்றேன். 
     -ஆமென்.

05A. நம்பிக்கை அறிக்கை(பாடும் போது)

01. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம் கடவுள் ஒருவர் இருக்கின்றார் தந்தை, மகன், தூய ஆவியாராய் ஒன்றாய் வாழ்வோரை நம்புகிறேன்.

02. தூய ஆவியின் வல்லமையால் இறைமகன் நமக்காய் மனிதரானார் கன்னி மரியிடம் பிறந்தவராம் இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்.

03. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார் சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.

04. விண்ணகம் வாழும் தந்தையிடம் அறியனைக் கொண்டு இருக்கின்றார் உலகம் முடியும் காலத்திலே நடுவராய் திரும்பவும் வந்திடுவார்.

05. தூய ஆவியாரை நம்புகிறேன் பாரினில் அவர் துணை வேண்டுகிறேன் பாவ மன்னிப்பில் தூய்மைப் பெற்று பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.

06. திரு அவை உரைப்பதை நம்புகிறேன் புனிதர்கள் உறவை நம்புகிறேன் உடலின் உயிர்ப்பை நிலை வாழ்வை உறுதியுடனே நம்புகிறேன்.

    -ஆமென்.

06. நற்கருணை வழிபாடுகாணிக்கை பாடல்

குரு: 
சகோதர சகோதரிகளே...
       ... மன்றாடுங்கள்

அனைவரும்:  
ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும் மாட்சிக்காகவும் நமது நன்மைக்காகவும் புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையில் இருந்து இப்பலியை ஏற்றுக் கொள்வாராக. 

அனைவரும்:  
ஆமென்.

07. நற்கருணை மன்றாட்டு

குரு: 
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 

அனைவரும்:  
உன் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: 
இதயங்களை மேலே எழுப்புங்கள்

அனைவரும்:  
ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம். 

குரு: 
நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். 

அனைவரும்:  
அது தகுதியும், நீதியும் ஆனதே.

(தொடக்கவுரையைத் தொடர்ந்து தூயவர் இடம் பெறும்)

தூயவர், தூயவர் தூயவர் - வான்
படைகளின் கடவுளாம் ஆண்டவர்,
விண்ணகமும் மண்ணகமும்
உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஓசானா
ஆண்டவர் பெயரால் வருகிறவர்
ஆசி பெற்றவர்.

உன்னதங்களிலே ஓசானா 

(அர்ச்சிப்புப் பகுதிக்குப் பின்)

08.. 

குரு:
நம்பிக்கையின் மறைபொருள்.

அனைவரும்:
ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கை இடுகின்றோம். உமது உயிர்ம்பினையும் எடுத்துரைக்கின்றோம்.

09. திருவிருந்துச் சடங்கு

குரு:
மீட்பரின் கட்டளையால்...
    ... சொல்வோம் 

அனைவரும்:
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களை சோதனைக்கு உட்படுத்தாதையும் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

குரு:
ஆண்டவரே,...
     ... காத்திருக்கின்றோம்.

அனைவரும்:
ஏனெனில், ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.

குரு:
ஆண்டவரே!...
     ... என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

அனைவரும்:
ஆமென். 

குரு:
ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.

அனைவரும்:
உ ம் ஆன்மாவோடும் இருப்பதாக.

குரு:
ஒருவருக்கொருவர் அமைதியை பகிர்ந்து கொள்வோம்.

அனைவரும்: (சொல்லும்போது)
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகின் பாவங்களைப் போக்கும்
இறைவனின் செம்மறியே
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகின் பாவங்களை போக்கும்
இறைவனின் செம்மறியே
எங்களுக்கு அமைதியை அளித்தருளும். 

(பாடுவதற்கு)
உலகின் பாவம் போக்கும்
இறைவனின் செம்மறியே எம்மேல்
இரக்கம் வையும். (2)

       உலகின் பாவம் போக்கும்
       இறைவனின் செம்மறியே, எமக்கு
       அமைதி அருளும்.

முகவரி

சங்குபேட்டை அருகில், துறையூர் ரோடு,
பெரம்பலூர் - 621212

கைப்பேசி

+91 72000 97653
+91 4328-277245

மின்னஞ்சல்

panimayamadha2019@gmail.com

காணிக்கை

Gpay : + 91 72000 97653

எங்களைத் தொடர்பு கொள்ள

ஜெப உதவிக்கு, உங்களின் தனிப்பட்ட தேவைகளை இங்கே பூர்த்தி செய்து அனுப்பவும் உங்களுக்காக ஜெபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Thank you! Your message has been sent.
Unable to send your message. Please fix errors then try again.

விதிமுறைகள் & நிபந்தனைகள்

தனியுரிமைக் கொள்கை