சங்குபேட்டை அருகில், துறையூர் ரோடு, பெரம்பலூர் - 621212
பனிமய மாதா காலனி, நிர்மலா நகர், கம்பன் தெரு - மாதத்தின் 2 ஆம் திங்கட்கிழமை
மேலும் படிக்க எளம்பலூர் ரோடு, மதனகோபாலபுரம் - மாதத்தின் 2 ஆம் திங்கட்கிழமை
நான்கு ரோடு புதிய பேருந்து நிலையம் - மாதத்தின் 2 ஆம் திங்கட்கிழமை
புதிய பேருந்து நிலையம் பின்புறம் - மாதத்தின் முதல் திங்கட்கிழமை
அன்பிய கூட்டம் நடத்தும் முறை
யாராவது ஒருவர் அன்றைய நற்செய்திப் பகுதியை அனைவருக்கும் கேட்கும் விதமாக, சத்தமாக, தெளிவாக 2 அல்லது 3 முறை வாசித்தல்.
2 நிமிடங்கள் அமைதியாக வாசிக்கப்பட்ட இறைவார்த்தையின் வழியாக இறைவன் நம்மோடு பேசுவதை உணர முயல்வோம்.
உள்ளத்தைத் தொட்ட வார்த்தையைத் தியானித்து, பின் அந்த இறைவார்த்தையை அல்லது சொற்றொடரை ஜெப மனநிலையோடு அனைவருக்கும் கேட்கும்படியாக மூன்று முறை அறிக்கையிடுதல்.
உள்ளத்தைத் தொட்ட இறைவார்த்தை வழியாக இறைவன் தனக்கு உணர்த்தியதை தங்கள் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களோடு இணைத்துப் பகிர்தல் வேண்டும்.
அனைவரும் இணைந்து வாழ்வின் வார்த்தையை முடிவு செய்து எல்லோரும் இணைந்து இரண்டு முறை சொல்வோம்.
1. திருச்சபைக்காக:
ஞானமென்னும் அருட்கொடைகளைச் சாலமோனுக்குக் கொடுத்த எம் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் கடவுளின் ஆசீர் பெற்றவர் என்பதை நாங்கள் உணர அல்லது பிறர்முன் துலங்க, நாங்கள் எங்கள் முழு ஆற்றலையும், திறன்களையும் பயன்படுத்த வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நாட்டு தலைவர்களுக்காக:
உறவுடன் வாழ ஒவ்வொருவரையும் அழைக்கும் உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தங்களை அழைத்துத் தங்களுக்குப் பணி நியமனம் செய்த அரசின் நோக்கத்துக்காக விசுவாசமாய் இருக்கும் விதத்தில் சிறந்த திட்டமிடுதலுடன் பாகுபாடின்றிப் பணியாற்றி மக்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்து நற்பெயர் ஈட்ட முயல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. சமுதாயத்திற்காக:
அகமுவந்தழைக்கும் அன்புத் தந்தையே இறைவா! இயேசு கிறிஸ்துவிடம் புன்னகையோடு வந்தவர் அனைவரும் முகவாட்டத்தோடு செல்வதில்லை என்ற நிலையும், தன்னலமற்ற சேவையால் இம்மையிலும் மறுமையிலும் எல்லாச் செயல்களைப் பெற்றவர்களாய் வளம் வரும் வரம் வேண்டியும், இறையாட்சிப் பணிகளை ஏற்ற காலத்தில், ஏற்ற இடத்தில், ஏற்ற முறையில் ஆற்றவேண்டிய வரத்தையும் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்பியங்களுக்காக:
உறவின் ஊற்றே உன்னத இறைவா! எங்கள் பங்கில் உள்ள எல்லா அன்பியக் குடும்பங்களிலும் செபமாலை பக்தி முயற்சி வளரவும், அன்னை மரியாளின் பரிந்துரையைப் பெற்று, எங்கள் பங்கைச் சேர்ந்த எல்லா நிறுவனங்களும், பக்தச் சபைகளும் வளர்ந்து சிறந்தப் பலனை வெளிப்படுத்த வேண்டுமென்று உண்மை மன்றாடுகின்றோம்.
5. நம் குடும்பங்களுக்காக:
என்றும் எங்களை நிறைவாய் ஆசீர்வதிக்கும் எம் இறைவா! இன்று நாங்கள் ஞானம் என்ற உம் கொடையைப் பெற்று இயேசு கிறிஸ்துவை எம்நிலைவாழ்வாக பெறவும், நீ ஆசீர்வதிக்கப்படுவாய்! என்று தினமும் நம் கண்முன் கொண்டிருக்கும் இறைவார்த்தை, நாங்களும் மற்றவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று எங்களை தூண்டவும், இறைவார்த்தையால் ஆசீர்பெற்ற வாழ்வை வாழவும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அடுத்த கூட்டம் எங்கு? எப்போது? யார் வழி நடத்துவது என்று முடிவு செய்வோம்.
நிதி நிலை அறிக்கையை பொருளாளர் பகிர்ந்து கொள்வார்.
1. பழைய இருப்பு
2. இன்றைய காணிக்கை
3. மொத்த இருப்பு
முடிவில் அன்பியம் நடத்தும் வீட்டாருக்கு நன்றி செலுத்துதல்.
நலன்களின் ஊற்றே இறைவா, உம்மை போற்றுகின்றோம். உம்மை புகழ்கின்றோம். நீர் எங்களுக்கு பொழிந்து வரும் அருட்கொடைகளுக்காகவும், செய்துவரும் அனைத்து நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம்.
அன்பின் தூய ஆவியானவரே! எங்களுடைய வலுவற்ற நிலையில் எங்களுக்குத் துணையாக வாரும். எதற்காக, எப்படி தந்தையிடம் வேண்டுவது என்று சொல் வடிவம் பெற முடியாத, எங்களுடைய பெருமூச்சுகளின் வாயிலாக தேவரீர் தாமே பரிந்து பேசும். எங்கள் அன்பியத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்படும் விருப்பு வெறுப்புகள், இன்ப - துன்பங்கள் அனைத்திலும், உமது வல்லமையால் நாங்கள் ஒற்றுமையாக வாழவும், ஒருவர் மற்றவருக்காக செபிக்கும் குடும்பங்களாகவும், வேதனை, சோதனை, துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் உமது திருச்சித்தம் என்றும் ஏற்றுக்கொள்ளும் மன நிலையையும், சக்தியையும் ஆறுதலையும் அருளும்.
நாங்கள் ஒருவர் ஒருவரை புரிந்து கொண்டு ஒருவர் மற்றவரின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து, அரவணைத்து வாழும் அன்பு குடும்பங்களாக மாற்றியருளும். அன்பே உருவான இயேசுவே, மன வேதனை தரும் அனுபவங்களினாலும், தீராத நோய், ஏழ்மை, தனிமை, அகம்பாவம், பொறாமை, பகைமை உணர்வு இவைகளால் தாக்கப்பட்டு அமைதியின்றி வாழும் அன்பியக் குடும்பங்களை உமது திருப்பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். உமது வல்லமையுள்ள திரு இரத்தத்தால் எங்களை தூய்மையாக்கி உமது சமாதானத்தை எங்களுக்கு அளித்து இறையன்பிலும், பிறர் அன்பிலும் நாங்கள் என்றும் வாழ அருள்புரியும். - ஆமென்.
அனைவருக்கும் தெரிந்த ஒரு மாதாப் பாடல்.
சங்குபேட்டை அருகில், துறையூர் ரோடு,
பெரம்பலூர் - 621212
+91 72000 97653
+91 4328-277245
panimayamadha2019@gmail.com
Gpay : + 91 72000 97653
ஜெப உதவிக்கு, உங்களின் தனிப்பட்ட தேவைகளை இங்கே பூர்த்தி செய்து அனுப்பவும் உங்களுக்காக ஜெபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.