குடியிருப்பு வீடுகளுக்குக் குடிநீர் வசதி, கழிவு நீர் வசதி செய்தார்.ஆழ்துளைக் கிணறு அமைத்தார்
பனிமய மாதா ஊர்வலத் தேர் அமைத்தார்
பேரளி கிராமத்துக் கோவிலை விரிவுபடுத்தித் திருவிழா கொண்டாடினார்
பனிமய மாதா கெபியை அமைத்தார்/ தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளித் திருமுடி சூட்டினார்
எஸ்கலீன் கலைத் தொடர்பகம் நிறுவ வசித்தவர்
17) பேரருள் பணி எஸ்.மரியதாஸ் அடிகளார்
பணிக் காலம்:
06.03.1991 முதல் 21.08.1997 முடிய ஆறு ஆண்டுகள்
ஆற்றிய சிறப்புப் பணிகள்:
05. 09.1991 ல் பெரம்பலூர் பங்கு மறை வட்டத்தின் முதன்மைப் பங்காக உயர்த்தப்பட்டது
ஆன்மீக மறுமலர்ச்சி
பொன் விழா நினைவாகப் பாத்திமா பள்ளிக்கு மேல்மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது
குருவானவர் இல்ல விரிவாக்கம்
கவினுறு கலை அரங்கம்/
5 கே.வி.ஜெனரேட்டர் வாங்கியது
இருபது பெண்களுக்கான செயற்கை வைரம் தீட்டும் பணி கனரா வங்கி உதவியுடன் தொடங்கினார்
கோயிலுக்குச் சொந்தமான கல்லறை இடத்தை அன்பு வழியில் மீட்டார்
ஞாயிறு தோறும் கவுல் பாளையத்தில் திருப்பலி
மருத்துவமனை அமைத்தார்
இருபத்தைந்து பேர் தங்கிப் பயில இலவச வசதி மிக்க உறைவிடம்
திருமண மண்டபம் அமைத்தலும் இவரது சீரிய பணிகளாகும்.
பொன் விழா மலர் வெளியீடு
பொன் விழா நினைவாக அன்னைக்குப் பொன் முடி சூடினார்
18) பேரருள் பணி எஸ்.சூசை அடிகளார்
பணிக் காலம்:
21.08.1997 முதல் 29.05.1999 வரை இரண்டு ஆண்டுகள்
ஆற்றிய சிறப்புப் பணிகள்:
வாடகை வீடுகளுக்குத் தண்ணீர்க் குழாய்கள் 6 அமைத்தார்
ஆலய குடியிருப்புகளுக்குச் சொந்தமான சில வீடுகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டார்
19) அருள் பணி சி.மரிய ஜோசப் அடிகளார்
பணிக் காலம்:
29.05.1999 முதல் 26.05.2005 வரை ஆறு ஆண்டுகள்
ஆற்றிய சிறப்புப் பணிகள்:
இவர் காலத்தில் திவ்விய நற்கருணை சுற்றுப்பிரகாரம் முதன் முறையாகப் பெரம்பலூர் நகர சாலைகளில் நமது முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடத்தினார்
20) அருள் பணி N.அருள்சாமி அடிகளார்
பணிக் காலம்:
26.05.2005 முதல் 03.06.2009 முடிய நான்கு ஆண்டுகள்
ஆற்றிய சிறப்புப் பணிகள்:
இவர் காலத்தில் நமது லூர்து அன்னை கெபி 03.02 2007-ல் கட்டப்பட்டது
21) அருள் பணி P.அந்தோணி சாமி அடிகளார்
பணிக் காலம்:
03.06.2009 முதல் 23.03.2012 முடிய மூன்று ஆண்டுகள்
ஆற்றிய சிறப்புப் பணிகள்:
தூத்துக்குடியில் இருந்து நமது ஆலயத்திற்குப் புதிய பனிமய மாதா சுருபம் கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டது
22) அருள் பணி I.அடைக்கலசாமி அடிகளார்
பணிக் காலம்:
01.05.2012 முதல் 09.06.2018 முடிய ஆறு ஆண்டுகள்
ஆற்றிய சிறப்புப் பணிகள்:
நமது ஆலயத்தை 29.04.2018-ல் புதுப்பித்தவர்
கோவிலின் வலப்புறப்பகுதியை விரிவாக்கம் செய்தவர்
23) அருள் பணி ஆ.இராசமாணிக்கம் அடிகளார்
பணிக் காலம்:
10.06.2018 முதல் 16.06.2024 முடிய ஆறு ஆண்டுகள்
ஆற்றிய சிறப்புப் பணிகள்:
ஆலயப் பீடத்தின் வலப்புறம் அமைந்துள்ள extention பகுதி வேலை முழுமையாக முடிக்கப்பட்டு இவரால் அர்ச்சிக்கப்பட்டது
ஆலயச் சுற்றுச்சுவர் எழுப்பி புதிய கதவு அமைத்து நுழைவாயில் பகுதியின் இடப் புறத்தில காவல் தூதர்களை நிறுவினார்
-நமது திருத்தலத்தில் அருட்பொருளகம், அருட் பயிலகம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கான இடம் புதுப்பிக்கப்பட்டது
ஆலய வழிபாட்டில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் விதமாக திருவழிபாட்டு செபங்கள் மற்றும் பாடல்கள் போன்றவை display 30 inch TV மற்றும் கணினி ஆலயத்திற்கென புதிதாக வாங்கப்பட்டு வாரந்தோறும் திருப்பலி மற்றும் விழா நாட்களிலும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது
பனிமய மாதா வெப்சைட் ஆரம்பிக்கப்பட்டது.
பனிமய மாதா முகநூல் பக்கம் ஆரம்பிக்கப்பட்டு பங்கின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பனிமய அன்னையின் பெருமையை உலகறியச் செய்தவர்.
ஆலயத்தின் நுழைவாயிலில் இரக்கத்தின் ஆண்டவர் கெபி மற்றும் புனித பனிமய மாதா கெபி அமைக்கப்பட்டது.
ஆலயத்தின் நுழைவாயில் வெளிப்புறத்தில் புனித அந்தோணியார் கெபி மற்றும் புனித செபஸ்தியார் கெபி நிறுவப்பட்டது.
ஆலயத்திற்குப் புதிய கீ போர்டு , மற்றும் நேரடி ஒளிபரப்பு லைவ் நிகழ்வுக்குத் தேவையான லேப்டாப், புரோஜக்டர், கேமரா, டேப் வாங்கப்பட்டது.
ஆலயத்தின் மேல் ஒவ்வொரு மணி தோறும் இறை வார்த்தை ஒலிக்கும் அலாரம் அமைக்கப்பட்டது.
ஆலயத்தின் கல்லறைத் தோட்டச் சுற்றுச்சுவர் புதிதாகக் கட்டப்பட்டது.
புதிய கொடி கம்பம் ( s.s. silvers and Brass) 53 அடி உயர அளவில் கட்டப்பட்டது, அதனைத் தொடர்ந்து புதிய கொடி, புனித பனிமய மாதா புகழைப் போற்றிப் புதிய கொடிப் பாடல் பங்குத் தந்தை அவர்களால் எழுதி இசை அமைக்கப்பட்டுக் குடந்தை மறைமாவட்டத்தின் ஆயர். மேதகு.ஜீவானந்தம் அவர்களால் வெளியிடப்பட்டது.
ஆலய வளாகம் முழுவதும் பேவர் பிளாக் தளமானது ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு . வரதராஜன் அவர்களின் பேருதவியால் பதிக்கப்பட்டது.
பங்கு அலுவலகத்தில் கணினி அமைக்கப்பட்டது.
மாதா கலையரங்கம் புதுப்பிக்கப்பட்டது.
பங்குத் தந்தை இல்லத்தின் பின்புறம் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டது. மேலும் பங்குத்தந்தையின் இல்லத்தில் வண்ணத் தளக் கற்களாலான தளம் அமைக்கப்பட்டது.
R.C பாத்திமா தொடக்கப்பள்ளியின் வளாகம் சிமெண்ட் தளமாக்கப்பட்டது.பள்ளியில் சுற்றுச்சுவர் எழுப்பிக் கதவு அமைக்கப்பட்டது. ஆலய வழிபாட்டில், ஞாயிறு தோறும் மாலைத் திருப்பலி, முதல் ஞாயிறு தோறும் சிறுவர் திருப்பலி, இரண்டாவது ஞாயிறு தோறும் ஆங்கிலத் திருப்பலி, நான்காவது சனி தோறும் குணமளிக்கும் செபக்கூட்டம். மற்றும் திங்கள், வெள்ளி, ஞாயிறு நீங்கலாக மற்ற நாட்களில் நவநாள் திருப்பலிகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன.
செவ்வாய், புதன், வியாழன், சனி ஆகிய நவநாட்களுக்கான நவநாள் செப அட்டைகள் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொரு நவநாளுக்கும் ஒவ்வொரு நபர் இனிப்பு உபயம் செய்திட ஏற்றுக் கொண்டது சிறப்பு மிக்கது.
ஆலயத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான திருமணத் தம்பதியர் இருக்கை, பாடகர், குழு பீரோ, ஒலி வாங்கி, ஆலயத்தைச் சுற்றிலும் மின் விளக்குகள், ஆலயத்தினுள் மின் விசிறிகள், CC TV கேமராக்கள், தரை விரிப்புகள், சிலுவை, ஆலய முகப்பில் ஆலயத்தின் SS உலோகப் பெயர்ப் பலகை, நான்கு வகையான இருக்கைகள், அமரர் ஊர்தி அறை, Digital Screen, கணினிகள், மேசைகள், நாற்காலிகள், ஆகிய அனைத்தும் வாங்கப்பட்டு ஆலயம் புதுப் பொலிவோடு விளங்கக் காரணமாக அமைந்தது.
கிளைக்கிராமம் கவுல்பாளையத்தில் ஒவ்வொரு மாதத்தின் 3-வது செவ்வாய் தோறும் புனித பதுவை அந்தோணியார் நவநாள் மற்றும் தேர்த் திருப்பலி ஆரம்பிக்கப்பட்டது.
பங்கு அளவிலான வாட்சப் (புலனம்) குழுக்களானப் பனிமய மாதா திருத்தலக் குழு, ஆங்கிலத் திருப்பலிக் குழு, பனிமய மாதா பாடகர் குழு, பங்குப் பேரவைக் குழு என்று நான்கு குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுப் பங்கின் வழிபாட்டு நிகழ்வுகளின் விவரங்கள், நேரம், முக்கிய அறிவிப்புகள், முக்கிய செயல்பாடுகள் அனைத்தும் இறைமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
வார நவநாள் திருப்பலிக்காகப் புனித அந்தோணியார், புனித சூசையப்பர், அற்புதக் குழந்தை இயேசு திருச்சுரூபங்கள் புதிதாக வாங்கப்பட்டன. முதல் சனிக்கிழமை புனித பனிமய மாதா நவநாள் தேர் பவனிக்கான நவநாள் தேர், மற்றும் ஆலயத்தில் உள்ளே நவநாளுக்கான தேர் என்று இரண்டு தேர்கள் செய்யப்பட்டன.
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை வழிபாடு புனித பனிமய அன்னையின் நவநாளோடு இணைந்த ஆடம்பரத் திருப்பலியாகக் கொண்டாடப்படுகிறது.
ஆலய முகப்பில் கிளைக்கிராமம் பேரளியில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் உள்ள சுரூபம் புதுப்பிக்கப்பட்டு ஆண்டுக்கு இருமுறை வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் இரண்டு கிளைக் கிராமங்களிலும் இறைவார்த்தை அலாரம் அமைக்கப்பட்டது.
நம் மறைமாவட்டத்திற்குப் புதிதாக குருவாகிட சகோதரர் ஆல்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுக் குரு மடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.